Article

கீழடி – பழந்தமிழர் நதிக்கரை நாகரிகம்

July 4, 2017

— ஜெயகுமாரன், சென்னை. வரலாறு என்பது வாழ்ந்த கதை மட்டுமல்ல. அதுவோர் இனத்தின் வாழ்வியற் படிமங்களையும் அதன் விழுமியங்களையும் மீட்டெடுப்பதாகும். வரலாற்றின் பதிவுகள் இருக்கும் வரை, அது அச்சமூகத்தை அடுத்த நகர்வுக்கு க டத்திக்கொண்டே இருக்கும். தமிழின் த தொன்மச் சான்றுகளைப் பொறுத்தமட்டில், ஈராயிரம் ஆண்டு வாழ்வியலைக் கூ றும் இலக்கியங்களும், வெளிநாட்டவரின் குறிப்புகளும், கட்டுமான உச்சமாக கற்கோவில்களும் குடைவரை கோவில்களும் நம்மிடைய இருந்தன. இருந்தாலும் அவை கூறும் தமிழரின் வாழ்வியற்கூறுகள் தமிழ்நாட்டிலோ ஈழத்திலோ அறியப்படவேயில்லை. ஆய்வுகள்தோறும் […]

Read More

வரலாற்றை அழிவினின்று காப்போம்

April 14, 2017

— முனைவர்.சுபாஷிணி வணக்கம். கீழடி ஆய்வுகள் இந்திய தொல்லியல் துறையினால் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் மார்ச் மாதம் அடுத்த கட்ட ஆய்வு நடைபெற்றது. இதில் கட்டிடங்களின் அடித்தள அமைப்புக்கள், மட்பாண்டங்கள், அணிகலன்கள், செங்கற்சுவர்கள் சுடுமண் குழாய்கள், கழிவுநீர் தொகுதிகள், உறை கிணறுகள் மற்றும் ஏராளமான தொல்லியல் சான்றுகள் ஆய்வின் போது கிடைத்தன. தமிழரின் வாழ்வியல் பண்பாட்டு மேன்மைக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதைப் பறைசாற்றும் சான்றுகளாக இங்குக் கிடைத்த தொல்லியல் சான்றுகள் […]

Read More

கீழடி ஆய்வும் அதன் காலக் கணிப்பு முறையும்

February 20, 2017

— நூ.த.லோக சுந்தரம் கீழடி அகழாய்வில் கண்ட பொருட்களைக்கொண்டு அங்கு வாழ்ந்தோரின் நாகரீக காலம் கணிக்க வேண்டும் என்றபோது அங்குக் கிட்டிய பொருள்களில் காணும்  கரிம பொருட்களை க் கொண்டு கணிக்க “ரேடியோ கார்பன்” (கதிரியக்கக் கரிமம் 14) எனும் வழி முறை உள்ளதை அறிவோம்.   அதன்  விளக்கத்தை விக்கிப்பீடியாவில்  காணலாம் (en.wikipedia.org/wiki/Radiocarbon_dating). கரி அணுக்களில் கரிமம் 14 என்பது கதிர் இயக்கம் வெளிவிடும்  இயல்பினது. ஓர்  வளரும் பொருள் (அதாவது, கரிமப்பொருள்) இவ்வகை கரியம்  14  (கோடியில் ஓரிரு) […]

Read More

மண்ணின் கீழ் அடியில் சென்ற கீழடி

October 15, 2016

— சிங்கநெஞ்சம் சம்பந்தம்.  மதுரையிலிருந்து  சுமார்  ஏழு கி.மீ. தூரத்தில் உள்ள கீழடியில், நடுவண் அரசின் கீழ் இயங்கும் ‘இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை’ கடந்த இரண்டாண்டுகளாக ( 2014-15, 2015-16)  மேற்கொண்ட அகழ்வாய்வின் போது வெளிப்பட்ட “பண்டைய நகரம்”, வெள்ளத்தால் மண்ணுக்கு அடியில்  புதையுண்டது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அந்த வெள்ளம் எங்கிருந்து வந்தது என்பதுதான் வினா? இன்றைய வைகை ஆற்றிலிருந்து கீழடி, சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளதே , இவ்வளவு […]

Read More